கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பண வீக்கம்.! கடுமையாக உயர்ந்த உணவு, எரிபொருள் விலை.! - Seithipunal
Seithipunal


கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பண வீக்கம் அதிகரிப்பால் குறைவான வருமானம் பெறுவோர் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கனடாவில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பண வீக்கத்தால் எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தொடர்ந்து உயர்ந்து வரும் எரிவாயு விலை ஆகியவை பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.

மேலும் சர்வதேச சந்தையில் கனடா டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால், இறக்குமதி அதிக விலைக்கு செய்யப்படுகிறது .

இந்நிலையில் 50 ஆயிரம் கனடா டாலர்களுக்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதிபேர் போதுமான உணவு வாங்க முடியாமல் சிரமப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas and food prices increases due to inflation in canada


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->