ஜெர்மனி | திடீரென பற்றி எரிந்த மருத்துவமனை: 4 நோயாளிகள் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


ஜெர்மனி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையின் நான்காவது தளத்தில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டு பல்வேறு அறைகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. 

இதனை பார்த்த பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு நான்காவது தளத்தில் இருந்த நோயாளிகளை மீட்டு பத்திரமாக வெளியேற்றினர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மற்றொரு நோயாளி படுகாயம் அடைந்த நிலையில் வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. 

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Germany hospital Sudden fire accident4 patients died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->