காலையிலே பெரும் சோகம்! அமெரிக்காவை அலறவிட்ட ஹெலன் புயல்: 200 பேர் பலி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி, புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா போன்ற மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது, இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள், மற்றும் பண்பாட்டு மையங்கள் பல சேதமடைந்தன. புளோரிடா மாநிலத்தில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது.

பெரும் வீடுகள், சாலைகள், மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், ஜார்ஜியா மற்றும் கரோலினா மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

மீட்பு குழுக்கள் செய்துள்ள தகவலின் படி, ஹெலன் புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாக உள்ளது.

மின்சார மின்தடை, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். புளோரிடா மற்றும் ஜார்ஜியா விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

ஹெலன் புயல் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூறாவளியின் பாதிப்புகளை குறித்து விரிவாக கலந்துரையாடி மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகளை உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Helen storm that screamed America 200 people died


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->