நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைக்கா நிறுவனம், தமிழக அரசு இந்த வழக்கில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை சேர்ந்த பழனிவேல் தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

வழக்கும், பின்னணியும்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்பாக இந்த படத்தில் மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி என ஒரு நடிகைகள் பலர் நடித்து உள்ளனர்.நேற்று இந்த வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வரும் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு பழனிவேல் என்பவர் தொடர்ந்துள்ளார்.

வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும் என்று அவரின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இடைக்கால தடைவிதிக்க மறுத்து, வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth vettaiyan movie should be ban case HC division case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->