ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 2009-ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

மேலும் கடந்த 2012-2014ல் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. மேலும் சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இருப்பினும், தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களித்த நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றிகரமாக நேற்று நிறைவேற்றப்பட்டது. 

இதன்முலம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க உறுதுணையாக இருப்போம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதியளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Implementation of the resolution brought against Sri Lanka in the UN Assembly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->