ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை ஒட்டி இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, நாரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஷின்சோ பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் அபேவின் முதுகு பக்கம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.இதையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்த ஷின்சோ அபேவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை ஒட்டி இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India mourns death of Japan former Prime Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->