நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற "இந்திய மாணவி"..! தவறி விழுந்து உயிரிழந்த சோகம்..!
Indian student fell in niagra falls and died in Canada
கனடாவில் நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்திய மாணவி நீர்வீழ்ச்சி குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள லோஹியன் காஸ் பகுதியைச் சேர்ந்தவர் பூனம்தீப் கவுர். 21 வயதான இவர் படிப்பிற்கான வீசா மூலம் கடந்த ஒன்றரை வருடங்களாக கனடாவில் தங்கி தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் பூனம்தீப் கவுர் கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியில் உள்ள குழியில் கால் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பூனம்தீப் கவுர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தூதரகம் வாயிலாக பிலிப்பைன்ஸில் பணியாற்றும் அவரது தந்தை மற்றும் இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பெண்ணின் உடலை கண்டுபிடிக்க மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். படிக்க சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மற்றும் அவரது கிராமம் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக நயாகரா நீர்வீழ்ச்சியில் அவ்வப்போது சுற்றுலா பயணிகள் குழிகளில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian student fell in niagra falls and died in Canada