ஜப்பான் || பிரதமர் அலுவலகத்தின் முன்பு வாலிபர் செய்த கொடூர செயல்...நடந்தது என்ன?
japaan primeminister office man sucide attempt
ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது திடீரென்று அந்த வாலிபர் தன் உடலில் தீ வைத்து கொண்டு எரிந்தபடி ஓடிய அந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் சுய நினைவை இழந்த அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜப்பானில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவுக்கு ஜப்பான் அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த வாலிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் முன்பு தீக்குளித்துள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவிக்கும்போது, "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் தெரிவித்த பின்னர் அந்த வாலிபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்தப்பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமரின் அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
japaan primeminister office man sucide attempt