தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சல்.! 3.10 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்.! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் கடந்த சில வாரங்களாக ஒகயாமா, ககாவா, மியாகி, அமோரி, வகயாமா, டோட்டோரி, ககோஷிமா ஆகிய மாகணங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அந்த கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது கண்டறியப்பட்டது.

இதைதொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாகாணம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கோஹிமா மாகாணத்திலும் சுமார் 34,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாகாணத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan plans to destroy 3 lakh chicken as bird flu spreads rapidly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->