மீண்டும் இந்தியாவிற்கு கிடைக்குமா கோஹினூர் வைரம்..!  - Seithipunal
Seithipunal


பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில், சமூக வலைத்தளங்களில், அவரது கிரீடத்தை அலங்கரித்த இந்தியாவின் கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்தியாவில் வெட்டப்பட்ட, உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு சென்றது. இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. 

அவர் கோகினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் அந்த கிரீடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியாக மாறியது. 

இந்த வைரத்தை, பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் திரும்ப பெற முடியவில்லை. தற்போது பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தும் காலமான நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் அரச வழக்கப்படி புதிய ராணியான கமிலா வசம் செல்லும். 

இந்நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடத்தை இந்தியாவிற்கு எலிசபெத்தின் மறைவுக்கு பிறகாவது திருப்பித் தர வேண்டும் என டுவிட்டரில் பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். வைரத்தை இப்போது எளிதாக திரும்பப் பெறுவது எப்படி? என்பது குறித்து சிலர் மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kohinoor diamond available India again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->