ரஷ்யாவின் சரக்கு ரயில் போக்குவரத்திற்கான தடையை நீக்கியது லிதுவேனியா.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் சரக்கு ரயில் போக்குவரத்திற்கான தடையை  லிதுவேனியா நீக்கியுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடங்கிய நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவின் அண்டை நாடான லிதுவேனியா ரயில் மூலம் கலினின்கிராடுக்கு ரஷ்ய சரக்கு பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதித்தது.

இந்நிலையில் லிதுவேனியா, ரஷ்யாவின் சாலை போக்குவரத்துக்கு மட்டுமே தடை, ரயில் போக்குவரத்திற்கு தடை இல்லை என்று தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் இருந்து மதுபானங்கள், மரக்கட்டைகள் மற்றும் கான்கிரீட்டுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு லிதுவேனியா அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கலினின்கிராடு பகுதிக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று லிதுவேனியா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lithuania lifts ban on russian rail transport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->