இந்தோனேஷியாவில் மீண்டும் வெடித்த மெராபி எரிமலை.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் ஏறக்குறைய சுமார் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் இருக்கும் நிலையில், அவ்வப்போது வெடித்து சிதறி நெருப்பு குழம்புகள் வெளியேறுகின்றன . இதனால் பல்லாயிரக்கணக்கானோர் எரிமலை பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகில் ஆபத்தாக எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி, மார்ச் 17 ஆம் தேதி வெடித்து சூடான எரிமலைக்குழம்பு மற்றும் சூடான சாம்பலை 1,300 மீட்டர் உயரத்திற்கு கக்கியது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,721 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எரிமலையில் இருந்து வெளிப்படும் சாம்பல்கள் சுற்றியுள்ள கிராமங்களை மூழ்கடித்துள்ளன.

எரிமலையை சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் எரிமலை வெடித்ததின் தாக்கம் இருப்பதால் போக்குவரத்து மற்றும் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எரிமலையின் தாக்கத்தினால், இந்தோனேசியாவில் வானிலை ஒரு மாத காலத்திற்கு மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Merapi volcano erupts again in Indonesia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->