22 வருடங்களுக்கு பிறகு நெப்டியூன் கோளின் புதிய படம்- நாசா வெளியீடு..!
neptiun planet new photo by jems web
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றான நெப்டியூன் கோளின் மிகத் துல்லிய படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இந்த படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு கடும் உழைப்புக்குப் பிறகு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியது.
இந்த 'ஜேம்ஸ் வெப்' என்ற தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியில், தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் உள்ளன. இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களை படம் எடுக்க முடியும். இது சமீபத்தில் வியாழன் கோளை படம் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் இந்த தொலைநோக்கி, நெப்டியூன் கோளை மிகத் துல்லியமாக படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படங்களை நேற்று நாசா வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தின் கடைசி கோளாகவும் பூமியில் இருந்து 4.3 பில்லியன் கி.மீ தொலைவில், பனிக்கட்டியால் நிரம்பி ஒரு ராட்சத கோளாக சூரியனை நெப்டியூன், வலம்வருகிறது.
இந்த கோளிற்கு சனி கோளைப் போன்று வளையங்கள் உண்டு, ஆனால் அந்த வளையங்களின் தெளிவான புகைப்படங்கள் இதுவரை கிடைக்காமால் இருந்தது. 1989ம் ஆண்டு வாயேஜர் - 2 விண்கலம் நெப்டியூன் கோளை வளையங்களுடன் இருக்கும் ஒரு தெளிவற்ற படத்தை முதன்முதலாக நாசாவின் எடுத்தது.
அதன்பின்னர் தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் துல்லியமான படம் வெளியாகியுள்ளது. நெப்டியூன் கோளின் அடர்த்தியற்ற வளையங்களை தொலைநோக்கியின் அகச்சிவப்பு கேமரா தெளிவாக படம் பிடித்துள்ளது.
இதன் காரணமாக நெப்டியூன் தனது வழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. நெப்டியூனுக்கு 14 துணைக்கோள்கள் இருக்கின்றனர். அவற்றில் கலாட்டியா, நயாட், தலசா, டெஸ்பினா, புரோட்டியஸ், லாரிசா மற்றும் ட்ரைடன் போன்ற ஏழு துணைக்கோள்களையும் படம்படித்து அசத்தியுள்ளது.
இந்த படம் நெப்டியூன் கோளின் வளிமண்டலம் குறித்த புதிய கோணத்தை காட்டுவதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன் தெரிவித்துள்ளார்.
English Summary
neptiun planet new photo by jems web