அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தும் வட கொரியா, ஐ.நா. கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தொலைதூர ஏவுகணை சோதனையை தொடர்ந்து நிகழ்த்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியா நாடு கடந்த மாதத்தில் மட்டும் 7 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அவற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சோதனை செய்யப்பட்ட ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.

கடந்த 2017 -ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையாக இது அமைந்தது. இந்த ஏவுகணையானது அமெரிக்கா வரை சென்று தாக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வட கொரிய நாடு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ், வட கொரிய நாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea to launch missile test Condemnation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->