பிரிட்டன்: ஒரு லட்சம் ஊழியர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலை உயர்வாசியை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வேண்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் அரசு தரப்பிலிருந்து ஊதிய உயர்வுக்காக முறையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வேலை பாதுகாப்பு, வேலை நீக்க விதிமுறைகள், ஓய்வூதியம், சம்பள விகிதம் ஆகியவற்றில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு டுவிட்டர் பக்கத்தில், சுமார் 124 அரசு துறைகள் மற்றும் பிற அமைப்புகளை சார்ந்த ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், வேலை நிறுத்தத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதமர் ரிஷி சுனக் இடைக்கால பட்ஜெட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என நம்பிக்கை அளித்த நிலையிலும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One lakh workers strike on February 1 in britain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->