இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்! - Seithipunal
Seithipunal



இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் பாகிஸ்தான் நாட்டிற்கு, தற்போது  எரிபொருள் தட்டுப்பாடு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இதன் காரணமாக அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இது ஒருபுறமிருக்க, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தாயார் என்று, வெள்ளை கொடியுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டின் 'அல் அரேபியா' தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் நாடு இப்போது அமைதியையே விரும்புகிறது. எங்களிடம் பொறியாளர்கள், மருத்துவர்கள், தீரமிக்க தொழிலாளர்கள் உள்ளனர். 

இவர்களை முறையாக பயன்படுத்தி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். இதுதான் எங்களது விருப்பம். 

இந்தியாவுடன் நாங்கள் மூன்று போர்களை நடத்தி, மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மையை மட்டுமே கொடுத்துள்ளோம். 

இந்த போரின் மூலம் நாங்கள் பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்" என்று ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Prime Minister Shehbaz Sharif


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->