நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து - 16 உடல்கள் மீட்பு - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் சென்ற விமானம் இன்று காலை காஸ்கி மாவட்டத்தின் பொக்காராவில் தரையிறங்கும்போது, நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் சேதி ஆற்றின் கரையில் திடீரென விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும்,  விமான நிலையம் தற்பொழுது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plane with 72 people onboard crashes Nepal 16 bodies recovered


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->