ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - அரசியலில் வன்முறைக்கு இடமில்லை - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தற்போது, அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் , பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi condems gun shoot to trumph


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->