ஐரோப்பாவிற்கு செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு.! அயல்நாட்டு சதி என ரஷ்யா குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரினை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன.

இந்த பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்தது. எனினும், அந்த குழாய்களில் எரிவாயு தேங்கி உள்ளது.

இந்நிலையில் ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களில் 4வது முறையாக சில பகுதிகளில் கசிவு உண்டானது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட திடீர் கசிவுக்கு வெளிநாட்டு அரசுகளின் சதி இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும். இதற்கு அவசர விசாரணை தேவை என்றும், இந்த விசாரணைக்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழலில், ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்கள் மூடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia blames foreign conspiracy for leaking gas pipelines to go Europe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->