பொருளாதாரத் தடைக்கு எதிராக ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு அளவு குறைப்பு - ஜெர்மனி குற்றச்சாட்டு
Russia cuts 20 percentage of gas export to Europe countries
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரினை கண்டித்து ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உலகளாவிய பொருளாதார தடையை கண்டித்து, ரஷ்யா ஏற்றுமதிக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய குழாய் மூலம் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் குழாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவை 20% குறைத்துள்ளது.
இதையடுத்து ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் அளவை ரஷ்யா குறைத்துள்ளது என ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் எரிவாயு அளவு குறைக்கப்பட்டதாக ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Russia cuts 20 percentage of gas export to Europe countries