ஐரோப்பிய நாடான லாட்வியாவுக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியது ரஷ்யா.!
Russia stops gas supply to Latvia
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பொருட்களின் விலையை யூரோ மற்றும் டாலரில் தராமல் ரஷ்யன் ரூபிளில் வழங்க வேண்டும் என ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
மேலும் ரஷ்யாவின் இந்த கட்டுப்பாட்டிற்கு உடன்படாத பல்கேரியா, பின்லாந்து, போலந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான லாட்வியா, ரஷ்யாவின் கொள்முதல் நிபந்தனையை மீறி உள்ளதால் எரிவாயு வழங்குவதை ரஷ்யாவின் கேஸ்புரோம் நிறுத்தியுள்ளது.
மேலும் மொத்த எரியாற்றல் தேவையில் 26 சதவீதம் ரஷ்யாவின் இறக்குமதியை லாட்வியா சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia stops gas supply to Latvia