நெதர்லாந்துக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு.!
Russia stops gas to Netherland
நெதர்லாந்துக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பெறும் நாடுகள் அதற்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் எரிபொருள் நிறுவனமான காஸ்டர்ரா ஏப்ரல் மாதத்திற்கான தொகையை இன்று வரை செலுத்தவில்லை என்று ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கேஸ் விலையை ரூபிளில் செலுத்தாத காரணத்தினால் செப்டம்பர் 30 வரை உள்ள கேஸ் வினியோக ஒப்பந்தத்தை இன்று முதல் நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
Russia stops gas to Netherland