உக்ரைனுக்கு எதிரான போர்... மேலும் 4 லட்சம் வீரர்களை களமிறக்க தயாராகும் ரஷ்யா..!
Russia to increase 4 lakh soldiers in ukraine war
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 13 மாதங்களாக நடைபெற்ற வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரங்களை கைப்பற்ற ரஷ்யா அதிக அளவு படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் படைகளும் ரஷ்ய வீரர்களின் திட்டங்களை முறியடித்து ரஷ்யப்படைகளை முன்னேற முடியாமல் தடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஒப்பந்தம் அடிப்படையில் 4 லட்சம் வீரர்களை தேர்வு செய்து போரில் ரஷ்யா களமிறக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட தகவலில், போரில் உயிரிழந்த ஏராளமான வீரர்களின் இடத்தை நிரப்புவதற்காக மீண்டும் அணி திரட்டல் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் போருக்கு முன்பே 11 லட்சம் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை 15 லட்சமாக உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் இந்த ஆள் சேர்ப்பு நடைபெறுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் போரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிபர் புதின் இருப்பதால் இந்த அணிதிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Russia to increase 4 lakh soldiers in ukraine war