போர் நிறுத்தத்தை மீறி ரஷியா தாக்குதல்; ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றசாட்டு!
Russia violates ceasefire Zelenskys sensational accusation
தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆனது.மேலும் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த போரால் உக்ரைன் நிலைகுலைந்து காணப்படுகிறது.
ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை . அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் உக்ரைன் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தநிலையில் , கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டியையொட்டி 30 மணிநேரம் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் தாமாக முன்வந்து அறிவித்தார்.இந்த போர் சனிக்கிழமை மாலை 6 முதல் ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிவரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ரஷியா அறிவித்தது.
இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் எல்லை நகரங்களான குர்ச்க், பெல்கொரெட் போன்ற மாகாணங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
English Summary
Russia violates ceasefire Zelenskys sensational accusation