லிதுவேனியா வழியாக ரஷ்ய போக்குவரத்துக்கு தடை.! ரஷ்யா கடும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


லிதுவேனியா வழியாக ரஷ்ய போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போரினால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்திருந்தனர்.

இதனையடுத்து ரஷ்ய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் போக்குவரத்து தொடர்பான வணிக முறை ஆகியவற்றிற்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான லிதுவேனியா ரயில் மூலம் கலினின்கிராடுக்கு ரஷ்ய சரக்கு பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளது.

ரஷியாவின் மற்ற பகுதிக்கும் கலினின்கிராட் பகுதிக்கும் இடையே லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில் லிதுவேனியாவின் இந்த தடையால் ரஷ்யாவின் பிற பகுதிகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை பின்பற்றியே ரஷ்யாவின் குறிப்பிட்ட பொருட்களை தங்களின் எல்லை வழியாக கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக லிதுவேனியா எந்த தடையும் விதிக்கவில்லை என்று கூறிவருகிறது.

இருப்பினும் லிதுவேனியாவின் போக்குவரத்து தடைக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிக்கோலாய் பேட்ருஷெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia warns over Lithuania ban on transport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->