போலிச் செய்தி பரப்பிய பிரபல யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை!
Russia Youtuber Arrested and Case Judgement
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் போலிச் செய்தி பரப்பியதற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தெற்கு பகுதியான கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ்.
அண்மையில் ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி, ஒரு சில வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ் பதிவேற்றி இருந்தார்.
இந்த வீடியோக்கள் கிராஸ்னோடர் நகர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அவரின் யூடியூப் சேனலும் பிரபலமடைந்தது.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்பான போலி புகைப்படம் ஒன்றை நோஸ்ட்ரினோவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறி போலீஸார் அவரை கைது செய்தனர்.
ஆனால், அப்படி எந்த ஒரு புகைப்படத்தையும் நோஸ்ட்ரினோவ் பகிரவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் போலீஸாரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அவரின் மனைவி எகட்டெரினா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த கிராஸ்னோடர் நீதிமன்றம், நோஸ்ட்ரினோவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 8 ஆண்டு, ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
English Summary
Russia Youtuber Arrested and Case Judgement