ரஷிய ராணுவம் உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்! 37 பேர் படுகாயம்!
Russian military drone attack on Ukraine 37 people were seriously injured
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் பல கட்டங்களாக டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.
ரஷியா விடாமல் உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் படுகாயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.
English Summary
Russian military drone attack on Ukraine 37 people were seriously injured