அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் - உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி.!! - Seithipunal
Seithipunal


அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் - உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி.!!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடங்களை கடந்துள்ளது. இந்தப் போரில் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். 

 

இருப்பினும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "அதிபர் மாளிகை மீது இரண்டு டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. அந்த இரண்டு டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இதில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த டிரோன் தாக்குதல் நடந்த நேரத்தில் அதிபர் புதின் மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கியுள்ளார். 

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம். இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது

இந்த நிலையில், அதிபர் மாளிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய படைகள் வடக்கு உக்ரைன் மாகாணங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russiya attack ukraine for president house drone attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->