பொருளாதார தடைகளே ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு நிறுத்தத்திற்கான காரணம் - டிமித்ரி பெஸ்கோவ்
Sanction on Russia is reason for shutdown of gas supply to Europe
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரினை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக ஜொ்மனிக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்று ரஷ்ய செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடத்திலுள்ள அழுத்த நிலையங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகின்றது. இந்த அழுத்த வேறுபாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்தான் காரணம். இதைத்தவிர்த்து குழாய் வழித்தடத்தில் கோளாறு ஏற்படுவதற்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெர்மனி அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
English Summary
Sanction on Russia is reason for shutdown of gas supply to Europe