பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவர்தான்., நாளை பதவியேற்பு.!
shehbaz sharif new pak PM
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த இரு மாதங்களாக அதிரடி அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த 3ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
நாளை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப்பை தேர்ந்தெடுக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் புதூரை பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தவர என்பதும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்-ன் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
shehbaz sharif new pak PM