சிங்கப்பூர் உண்மையிலேயே பாதுகாப்பான நாடா? டிக்டாக் பயனர் வெளியிட்ட வீடியோ.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் டாப் லிஸ்டில் இடம் பெற்று இருந்தது. ஒரு டிக் டாக் பயனர் இதை எந்த அளவிற்கு உண்மை என்று பார்க்கலாம் என ஒரு செய்முறை விளக்கத்தை செய்தார். 

அதன்படி பிரபல ஹோட்டல் ஸ்டார்பக்சில் தனது விலை உயர்ந்த லேப்டாப்பை வைத்துவிட்டு அவர் சென்று விட்டார். அதன் பின்னர், ஒரு மணி நேரம் கழித்து அவர் வந்து அந்த ஓட்டலில் பார்த்தபோது தான் வைத்த இடத்தில் அப்படியே அந்த லேப்டாப் இருப்பதை கண்டு வியந்து போய் இதுதான் சிங்கப்பூரில் பாதுகாப்புத் தன்மைக்கான சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவை அவர் பதிவிட்டதும், அதில் ஒரு நபர் ஒருமுறை சிங்கப்பூர் பேருந்து நிலையத்தில் எனது செல்போனை மறந்து விட்டு விட்டு சென்றதாகவும், நான் மறுநாள் வந்து பார்த்தபோது ஒரு கவரில் எனது செல்போன் போடப்பட்டு யாரோ தொலைத்துவிட்ட செல்போன் என்று அதில் எழுதி வைத்திருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதை பார்த்த வேறொரு நபர் இதுவே லண்டனாக இருந்தால் லேப்டாப் கண்முன்னே இருந்தே காணாமல் போய் இருக்கும் என்று வேடிக்கையாக பதிவிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singapore tiktok user prove that singapore is safest country ever


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->