9 வினாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுரங்கள்..! - Seithipunal
Seithipunal


உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்களை வரும் 28-ம் தேதியன்று வெடி பொருள் வைத்து தகர்க்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நொய்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இரட்டைக் கோபுரங்களை தகர்க்க முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும் என்றும் இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்றும் கட்டட இடிப்பின் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டட கழிவுகளை உடனுக்கு உடன் அகற்றவும், 3 கி.மீ. தொலைவிற்கு பொது மக்கள் நடமாட்டம் வாகன போக்குவரத்தை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என்றும்  அதனை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சரியாக, ஆக. 28-ம் தேதி பிற்பகல் 2:௩௦ மணிக்கு கட்டடம் இடிக்கப்படும்; 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்து விடும். ஒட்டுமொத்த இடிப்பு பணிகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவாகும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The twin towers will be demolished in 9 seconds


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->