#BREAKING:: ரஷ்ய அதிபர் மாளிகை மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்..!!
Ukrainian drone attack on Russian presidential palace
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினைக் கொல்லும் நோக்கில் அவருடைய மாளிகையான கிரெம்ளின் மீது சற்று முன்னர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய நேரப்படி இன்று இரவு இரண்டு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை பல ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தி உள்ளனர். ரஷ்ய அதிபர் புடினுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரசிகர்கள் அதிபர் மாளிகை மீது ஆளில்லா விமான மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது என்றும், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக தாக்குதலைக் கருதுகிறது என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் எச்சரித்துள்ளது.
கிரெம்ளின் மீது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும், ரஷ்யாவின் வெற்றி தினமான மே 9 அணிவகுப்புக்கு முன்னதாக ரஷ்ய அதிபரை கொலை செய்யும் முயற்சி என்றும் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
புடின் தனது அட்டவணையை மாற்றவில்லை எனவும், வழக்கம் போல் வேலை செய்தார் எனவும் ரஷ்ய மாளிகை அறிவித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் அதிபர் புடின் கிரெம்ளினில் இல்லை எனவும், மாஸ்கோவிற்கு வெளியே உள்ள அவரது நோவோ ஒகாரியோவோ இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Ukrainian drone attack on Russian presidential palace