தலீபான் கொடியுடன் வெளியான ஐ.நா அதிகாரிகளின் புகைப்படம்.! மன்னிப்பு கேட்ட ஐ.நா - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இதில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தது. தலீபான்களின் இந்த நடவடிக்கைக்கு, ஐ.நா தொடக்கத்திலிருந்தே கண்டித்து வருவதுடன், பெண்கள் மீதான தடைகளை நீக்க கோரி வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் தலீபான் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. துணை பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான குழு நான்கு நாட்கள் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் தலீபான் அமைச்சர்களை சந்தித்த ஐ.நா குழுவினர், பெண்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பினை தெரியப்படுத்தினர். இதனிடையே ஐ.நா அதிகாரிகள் சிலர் தலீபான் கொடிக்கு முன் நின்று புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்காக ஐ.நா மன்னிப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும் பொழுது, இந்த புகைப்படம் எடுத்திருக்கக் கூடாது. அதிகாரிகள் மிகவும் கவன குறைவாக செயல்பட்டதை காட்டுகிறது. இது மிகவும் தவறானது.

இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குழுவின் மேற்பார்வையாளர்கள் இது பற்றி பேசியதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Un apologizes for un officials photo with Taliban flag


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->