உக்ரைன் அணுமின் நிலையத்தில் ஐ.நா நிபுணர்கள் நிரந்தர கண்காணிப்பு.!
UN experts stay in Ukraine power plant for permanent research
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் ஸபோரிஸியா அணு மின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
மேலும் ஸபோரிஸியா சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலால் மூடப்பட்ட அணு உலை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி அமைப்பைச் சேர்ந்த 14 நிபுணா்கள் கடந்த வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
இந்நிலையில் பார்வையிட்ட நிபுணர் குழுவில் 6 பேர் மற்றும் 2 ஐஏஇஏ நிபுணர்கள் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக தங்கி ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐநா நிபுணர்கள் ஆய்வகத்தில் தங்கி இருந்து கண்காணிப்பதை வரவேற்கிறோம் என்றும், அப்போதுதான் அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று சர்வதேச சமுதாயமும் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆஸ்திரியாவுக்கான ரஷியத் தூதா் மிகயீல் உல்யனோவ் தெரிவித்துள்ளார்.
English Summary
UN experts stay in Ukraine power plant for permanent research