பல நாடுகள் பங்கேற்கும் 2ம் உலகப்போர் வெற்றி அணிவகுப்பு...! பிரதமர் மோடி இதில் பங்கேற்க மாட்டார் என தகவல்...!
World War II Victory Parade attended by many countries reported that pm Modi not participate
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 2 ம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்றுவெற்றி தினம் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இதில் மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவூட்டும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷ்யாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
இந்த கொண்டாட்டத்தில் ரஷ்யா, பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவில் நடைபெறும் 2 ம் உலகப்போர் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள மாட்டார்' எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், இந்த விலவ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இதற்கு மக்கள் கலவையான பல விமர்சனங்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.இதனால் பின்விளைவாக இந்தியா, ரஷ்யாவால் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
World War II Victory Parade attended by many countries reported that pm Modi not participate