டிரோன்கள் விவகாரத்தில் ஈரான் பொய் சொல்கிறது - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களையும் உதவி தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனின் மின் நிலையங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியதால், அங்கு மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படுள்ளது. 

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை ஈரானிடம் இருந்து ரஷ்யா வாங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நட்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டின. 

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்த ஈரான், முதல் முறையாக ரஷ்யாவுக்கு டிரோன்கள் வழங்கியதை நேற்று ஒப்புக்கொண்டது. 

ஆனால் ரஷ்யாவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான டிரோன்களையே வழங்கியதாகவும், உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே அவற்றை வழங்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிற்கு டிரோன்கள் வழங்கியதில் ஈரான் பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, நாள்தோறும் குறைந்தபட்சம் 10 ஈரான் டிரோன்களையாவது தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரான் இதே போன்று தொடர்ந்து பொய் கூறி வந்தால், ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான பயங்கரவாத ஒத்துழைப்பு குறித்து உலக நாடுகள் விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky accuses Iran of lying about drones


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->