2025 ஹோண்டா CB350 தொடர் – ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா: புதிய அம்சங்களுடன் மிரட்டும் ஹைனஸ் இந்திய சந்தையில் அறிமுகம்!
2025 Honda CB350 Series Honda gives Royal Enfield a tough fight Intimidating highness debuts in the Indian market with new features
ஜப்பானின் பிரபலமான வாகன நிறுவனம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI), தனது 2025 CB350 தொடரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் CB350 ஹைனெஸ், CB350, CB350RS ஆகிய மாடல்கள் புதிய வண்ண தேர்வுகளுடன் மற்றும் OBD-2B தரநிலைகளுக்கு ஏற்ற எஞ்சின் மேம்பாடுகளுடன் வந்துள்ளன.
விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்
- CB350 ஹைனெஸ்: ₹2.11 - ₹2.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- CB350: ₹2.00 - ₹2.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- CB350RS: ₹2.16 - ₹2.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- இந்த புதிய மாடல்கள் ஹோண்டாவின் பிக் விங் டீலர்ஷிப்புகள் மூலமாக விற்பனை செய்யப்படும்.
புதிய அம்சங்கள் & மேம்பாடுகள்
348cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் (OBD-2B தரநிலைக்கு இணங்க)
பவர்: 20.7bhp | முறுக்குவிசை: 29.4Nm
5-ஸ்பீடு கியர்பாக்ஸ் + ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச்
CBS மற்றும் Dual-Channel ABS பிரேக்கிங் சிஸ்டம்
முழு LED லைட்டிங், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
புதிய வண்ண விருப்பங்கள் & மேம்பட்ட ஸ்டைலிங்
மாடல் வாரியாக மாற்றங்கள்
CB350 ஹைனெஸ் – மாடர்ன்-கிளாசிக் டிசைன், புதிய வண்ண விருப்பங்கள்
CB350 – இரண்டு வகைகளில் (DLX & DLX Pro), கிளாசிக் ஸ்டைலிங்
CB350RS – ஸ்போர்ட்டி லுக்குடன், சிங்கிள் சீட், லைட்டர்வெயிட் டிசைன்
போட்டியாளர்கள் & எதிர்பார்ப்பு
இந்த புதிய CB350 தொடர், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, மெட்டியோர் 350, ஜாவா 42 & Yezdi Roadster போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்குகிறது.
English Summary
2025 Honda CB350 Series Honda gives Royal Enfield a tough fight Intimidating highness debuts in the Indian market with new features