SC பையன திருமணம் செய்வீர்களா? என்ன கேள்வி இது? கொந்தளித்த ஷ்யாம் கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்று, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

சமீபத்தில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பெண்களிடம், "நீங்கள் பட்டியல் இன இளைஞரை திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்புவது போல் அமைந்துள்ளது.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தாலும், அதே சமயத்தில் கடுமையான எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "SC என்ற சொல் தான் எவ்வளவு இழிவானது… இங்க SC பையன திருமணம் செய்வீர்களா என்று satellite சேனலில் சர்வசாதாரனமாக கேட்டு விட முடியும்,

அதே இடத்தில் தேவேந்திர குல வேளாளர் பையனை திருமணம் செய்வீர்களா, கள்ளர் சாதி பையன, நலிக்குறவர் சாதி பையன திருமணம் செய்வீர்களா என்று கேட்டுவிட முடியுமா? விளைவுகள் என்னவாக இருக்கும்? எப்போதான்டா உங்களுக்கு இது எல்லாம் விளங்கும்? எவ்வளவு பெரிய உளவியல் சிக்கலை உண்டாக்க கொண்டே இருக்கிறீர்கள்.

SC பையன திருமணம் செய்வீர்களா என்ற கேள்வி தான் சமூகத்தில் சாதியின் நிலையை காட்ட இவர்களுக்கு கிடைத்த கேள்வியா? இந்த இழுக்கு, stigmaவையும் கூட SC பசங்கதான் சுமக்க வேண்டுமா? 

தமிழகத்தில் 98% திருமணங்கள் அவரவர் சாதிக்குள் தான் நடக்கிறது. ஏதோ BC, MBCயில் உள்ள சாதிகள், சாதி கடந்து திருமணங்கள் நடப்பதை போலவும், SC சாதியினரை திருமணம் செய்வதில் மட்டும் பிற்போக்கு தனம் இருப்பதை போலவும் ஏன் காட்ட நினைக்கவேண்டும்?

பட்டியல் பிரிவில் இருக்கும் சாதிகளுக்குள் கூட சாதி மாறி திருமணம் நடப்பதில்லையே! இதற்கு இவர்களிடம் விளக்கம் உள்ளதா?

இங்க எந்த SC சாதியினரும் மற்ற சாதிகள் தங்களை திருமணம் செய்துகொள்ளவில்லையே என்று தவம் கிடக்க வில்லை. இதற்கு காதல் திருமணங்கள் மட்டுமே விதிவிலக்கு… இந்த சமூகத்தில் காதலே விதிவிலக்கு தான்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PT Shyam Krishnasamy condemn to TV Program


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->