பாகிஸ்தான் தூதரகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் கண்ணாடி உடைப்பு; லண்டலின் இந்தியர் கைது..!
Stone pelting at Pakistan embassy glass shattered Indian arrested in London
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இவ்வாறு பாகிஸ்தான் தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய இங்கிலாந்து வாழ் இந்தியரான 41 வயதுடைய அங்கித் என்பவரை லண்டன் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அங்கித் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Stone pelting at Pakistan embassy glass shattered Indian arrested in London