பாகுபலி முதல் பாகம் ரீ-ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..!
Baahubali Part 1 Re Release Film crew announcement
கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இந்த படத்தில், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எம்.எம் கீரவானி இசையில், இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது.
இந்த நிலையில், பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ளது. இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடிகர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Baahubali Part 1 Re Release Film crew announcement