ஏடிஎம் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு – வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள்!
ATM withdrawal fee increase new rules for customers
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மிகவும் அவசியமானதாக அமைந்துள்ளது. ஆனால், இனி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு நாளில் ஐந்து முறை வரை இலவசமாக பணம் எடுக்க முடியும். இதை கடந்தால், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் ₹21 இருந்ததை ₹22 ஆக உயர்த்தியுள்ளார்கள். இதேபோல், ATM இன்டர்சேஞ்ச் கட்டணம் ₹17 இலிருந்து ₹19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கி வாடிக்கையாளர், வேறு வங்கியின் ATM-ல் பணம் எடுத்தால், அதற்கான பரிவர்த்தனை கட்டணமாக இந்த இன்டர்சேஞ்ச் கட்டணம் விதிக்கப்படும். அதாவது, உங்கள் வங்கி PNB என வைத்துக்கொண்டால், நீங்கள் SBI, ICICI போன்ற வேறு வங்கிகளின் ATM-ல் பணம் எடுத்தால் இந்த கட்டண உயர்வு உங்களை பாதிக்கும்.
வங்கிகள், ATM பராமரிப்பு செலவுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரித்து வருவது இதற்குக் காரணம் என விளக்கம் அளித்துள்ளன. அதோடு, புதிதாக ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுவதற்கும், செயல்படுத்துவதற்கும் அதிக செலவு வருகிறது என்பதையும் வங்கிகள் முன்வைத்துள்ளன.
ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பழக்கத்தை சீரமைக்க வேண்டும்.இருந்துவிடும் பணத்தை கணக்கிட்டு பயன்படுத்தி தேவையில்லாமல் பல முறை பணம் எடுப்பதை தவிர்க்கலாம்.
டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை அதிகமாக பயன்படுத்தலாம் (UPI, Debit Card, Net Banking).இந்த புதிய விதிகள், வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் செலவாக இருக்கலாம். எனவே, தங்களுடைய பண பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செய்வது மிகவும் அவசியம்.
English Summary
ATM withdrawal fee increase new rules for customers