அடேங்கப்பா!!! ரூ. 7.47 கோடி மதிப்பில் வாட்ச்!மாஸ் காட்டி அணிந்து வந்த ஜூனியர் என்.டி.ஆர்...! - Seithipunal
Seithipunal


சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது அக்காலம்முதல்  வழக்கம்.இதில் கார்கள், உடை,நகைகள், கைக்கடிகாரம்,காலணி, கைப்பை போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

மேலும் இன்னொரு புறம் நடிகர்-நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை அனேக ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்தவரிசையில், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கனவே விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வைத்துள்ள நிலையில், சமீபத்தில் அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்து இறங்கினார்.

அப்போது அவர் கையில் அணிந்திருந்த புதிய கைக்கடிகாரம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. மேலும் அதன் விலையை ரசிகர்கள் இணையத்தில்  தேடி ரூ.7 கோடியே 47 லட்சம் என்று கண்டிபிடித்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதை பார்த்த பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.மேலும் இதைப்போன்று பல கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jr NTR wore a watch worth Rs 7point 47 crore Mass show


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->