இப்படியும் திருடலாமா!!! வாயில் விழுங்கி திருட்டு நடத்தி சிக்கிய பெண்! நகை கடையின் சிசிடிவி காட்சி வைரல்!
Woman caught stealing by swallowing it in her mouth CCTV footage of jewelry store goes viral
பீகார் மாநிலம் பாட்னா நாளந்தா மாவட்டத்திலுள்ள சிலாய் மார்க்கெட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அங்கிருந்த கடைக்காரரிடம் நகைகளைக் காட்டுமாறு கூறினர். இதில் கடைக்காரர் சில தங்க மோதிரங்களை அவர்களுக்குக் காண்பித்தார்.

அந்தப் பெண்களில் ஒருவர் மோதிரங்களை எடுத்துப் பார்ப்பதுபோல், அவற்றில் சிலவற்றை யாரும் பார்க்காத நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வாயில் போட்டு விழுங்கினார்.பின்னர்ச் சிறிது நேரம் கழித்து நகைகளின் மாடல் பிடிக்கவில்லை என்று கூறி, எதையும் வாங்காமல் இருவரும் கடையை விட்டு வெளியேற முயன்றனர்.
அப்போது எடுத்துக் காட்டிய மோதிரங்களை எண்ணிப்பார்த்த கடைக்காரர்எண்ணிக்கைக் குறைந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்தப் பெண்களை தடுத்து நிறுத்தி, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அந்தப் பெண் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கியது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தார். மேலும் அந்தப் பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நூதன முறையில் நடந்த இந்தத் திருட்டு மக்களிடையே பல விமர்சங்களைப் பெற்று வருகிறது.இப்படியும் திருடல்லாமா?என்ற கேள்வியும் எழுகிறது.
English Summary
Woman caught stealing by swallowing it in her mouth CCTV footage of jewelry store goes viral