ஐயோ!!! இது மட்டும் தான் அதிகாரப்பூர்வமானது,மற்றவை போலி!!! - கயாடு லோகர்
This is official one the others are fake Gayatu Logar
டிராகன் திரைப்படம் ,கடந்த 21-ம் தேதி வெளியான வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில்,அதில் நடித்த நாயகி 'கயாடு லோஹர்' ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.அவர் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.

மேலும் டிராகன் படத்தையடுத்து தமிழில் 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயாடு நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கயாடு லோஹரின் பெயரில் எக்ஸ் பக்கத்தில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன. இதை கவனித்த கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம்.
நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது
English Summary
This is official one the others are fake Gayatu Logar