ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆறு ஏர்பேக்குகள் கொண்ட சிறந்த கார்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கார்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கார் வாங்குபவர்களின் பார்வை தற்போது மாறி வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன் வரை விலை மற்றும் மைலேஜ் முக்கிய அம்சங்களாக இருந்த நிலையில், இப்போது பாதுகாப்பும் அவற்றுடன் இணைந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, வாகன விபத்துகள் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கார்கள் பெரிதும் தேடப்படுகின்றன.

இந்த எண்ணத்தை உணர்ந்த car உற்பத்தியாளர்கள் தற்போது கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை வழங்க தொடங்கியுள்ளனர். Bharath NCAP (New Car Assessment Programme) அறிமுகம், பாதுகாப்பு மீதான நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்த மாற்றத்திற்கு காரணமாகும்.

பாராட்டத்தக்க மாற்றம் என்னவெனில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் தற்போது ஆறு ஏர்பேக்குகள் (6 airbags) தரநிலையாக வழங்கப்படும் கார்கள் சந்தையில் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து கார்களை இங்கே பார்ப்போம்:

1. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

2024-ல் அறிமுகமான நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட், ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை கொண்டது. அடிப்படை மாடலிலிருந்தே ஆறு ஏர்பேக்குகள், ESC, ABS+EBD, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மூன்று-புள்ளி சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

2. மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

அதே நிறுவனத்தின் டிசையர் மாடலும் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கிறது. ரூ.6.83 லட்சத்தில் துவங்கி ரூ.10.19 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை கொண்ட இந்த காரில் ESC, பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட், மூன்று-புள்ளி பெல்ட், பின்புற டிஃபாகர் ஆகியவை தரநிலையாக உள்ளன. மேலும், இது மாருதியின் ஒரே 5-நட்சத்திர Global NCAP மதிப்பீட்டைப் பெற்ற மாடல்.

3. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப நிலை SUV மாடல் எக்ஸ்டர், இந்தியாவில் முழு வரம்பிலும் ஆறு ஏர்பேக்குகளை தரநிலையாக வழங்கும் முதல் கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது. ரூ.6.20 லட்சம் முதல் ரூ.10.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை கொண்டது. இது இன்னும் NCAP சோதனையில் சோதிக்கப்படவில்லை.

4. கியா சிரோஸ் (Kia Sonet)

இது சமீபத்தில் Bharath NCAP இல் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற SUV. அதன் அடிப்படை மாடலிலிருந்தே ஆறு ஏர்பேக்குகள், ESC, VSM, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டிங், ISOFIX மற்றும் முன்னணி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. விலை ரூ.9.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.

5. டாடா Curvv (Tata Curvv)

டாடா மோட்டார்ஸின் புதிய நடுத்தர அளவிலான SUV, Curvv, Bharath NCAP இல் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்றிருக்கிறது. ₹9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில், இது பாதுகாப்பு, டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் நல்ல சமநிலையை வழங்குகிறது.

முன்னைய காலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தி பெற வேண்டியவை. ஆனால் இப்போது, நிறுவனங்களின் முயற்சியால் அடிப்படை மாடல்களில் கூட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் தரநிலையாக வழங்கப்படுகின்றன. இது நிச்சயமாக நுகர்வோருக்கான நல்ல மாற்றமாகும். பாதுகாப்பு முதல் என்பதைக் கவனத்தில் கொண்டு, உங்கள் அடுத்த கார் தேர்வை செய்யுங்கள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Best cars with six airbags under Rs 10 lakh cars that ensure safety


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->