அதிர்ச்சி வீடியோ: கழுத்தை அறுப்பேன்! இந்தியர்களை மிரட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி!
Jammu and Kashmir Pahalgam terrorists attack london PAK Embassy viral video
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான ஆலோசகராக பணியாற்றிய கர்னல் தைமூர் ரஹத், தனது கையில் இந்திய விமானப்படை முன்னாள் அதிகாரி அபிநந்தனின் படத்துடன், கழுத்தை அறுக்கும் வகையில் சைகை செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகமெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Jammu and Kashmir Pahalgam terrorists attack london PAK Embassy viral video