''சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல முகமூடி அணிந்துள்ளார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால்..?'' நடிகை மாளவிகா மோகனன் வேதனை..!
Some actors pretend to respect women But behind the camera Actress Malavika Mohanan is in agony
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன், இவர் சினிமாவில் ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; சினிமாவில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள்.
அந்த மாதிரியான முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை கடந்த 05 ஆண்டுகளில் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு இரட்டை வேடம் போடும்நடிகர்கள் எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றும், கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள் என்பதை தான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏன் இவர்கள் இந்த பாசாங்குத்தனம் செய்கிறார்கள் ..? ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
English Summary
Some actors pretend to respect women But behind the camera Actress Malavika Mohanan is in agony