காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர்; ரஜினிகாந்த கண்டனம்..!
The enemies are trying to disturb the peaceful atmosphere in Kashmir Rajinikanth condemns
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் விளிவந்த ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் 02-ஆம் பாகம் 'ஜெயிலர் 2' வெளிவரவுளோளது.
இந்த படத்திர்கான படப்பிடிப்பு தமிழக - கேரள எல்லையான கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, "காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து, கனவில் கூட நினைக்காத வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
English Summary
The enemies are trying to disturb the peaceful atmosphere in Kashmir Rajinikanth condemns