ரூ.1.64 லட்சம் கோடி : மீண்டும் உயிர்பெறும் பிஎஸ்என்எல் -  மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்தவும், தரம் உயர்த்துவதற்கும், அந்நிறுவனத்திற்கு ரூபாய் 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ' வருகைக்குப் பின்னர், இந்தியாவில் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் பெறும் இழப்பை சந்தித்து வருகின்றன. இதில், அரசு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்தவும், அதன் தரத்தை உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இதற்காக அந்நிறுவனத்திற்கு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்டவைகள் திண்டாடி கொண்டிருக்க, பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce for BSNL


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->